பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புக்கு 87,033 மாணவர்கள் விண்ணப்பம்! - பி இ கலந்தாய்வு
சென்னை: பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்காக தற்போதுவரை 87,033 மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைகழகம்
இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கான இணையதளப் பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் 5 மணி வரையில் 87,033 மாணவர்கள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.