தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘அயோக்யா’ பட ரிலீசுக்கு தொடரும் சிக்கல்!

சென்னை: இன்று விஷால் நடிப்பில் உருவான ‘அயோக்யா’ படம் ரிலீஸ் என்று அறிவித்திருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளிவரவில்லை.

விஷால்

By

Published : May 10, 2019, 2:54 PM IST

Updated : May 10, 2019, 3:36 PM IST

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிகர் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அயோக்யா’. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம்.

கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அயோக்யா வெளியீடு என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடியாததல், படக்குழு ‘அயோக்யா’ திரைப்படத்தின் வெளியீடு ‘மே 10’ (இன்று) என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் எழுந்துள்ளதால் இன்றும் படம் ரிலீசாகவில்லை. இதனால் ‘அயோக்யா’ திரைப்படத்திற்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது குறித்து, நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு நடிகனாக அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகமது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன், எனது பயணம் தொடரும்’ என ட்வீட் செய்துள்ளார்.

Last Updated : May 10, 2019, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details