சென்னை:தமிழ்நாடு முழுவதும் 31 காவல் ஆய்வாளர்களை நான்கு மண்டலங்களுக்கு பிரித்து பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் இருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மேற்கு மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விக்னேஷ் இரவு காவலில் அயனாவரம் காவல் நிலையத்தில் வைத்திருந்த போது பொறுப்பு அதிகாரியாக செல்வராஜ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விக்னேஷ் கொலை வழக்கில் 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு, தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் செந்தில் குமார் தென்மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்தும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.