தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரத்த சோகையை தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி கீதாஜீவன்

தமிழ்நாட்டிலுள்ள 19 மாவட்டங்களில் ரத்த சோகையைத் தடுப்பதற்கான விரிவான விழிப்புணர்வு நடத்திட 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு
இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு

By

Published : Jun 29, 2022, 10:10 PM IST

தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதுடன், அவர்களின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டு, அமைச்சர் பி. கீதாஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.

2. ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75 கோடி ரூபாய் செலவினத்தில் நடத்தப்படும்.

3. மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் ஆயிரம் நாள்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தப்படும். ஆகமொத்தம் 7.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details