சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி மேயர் பிரியா பாராட்டுச் சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். நிகழ்வில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், ஆளுங்கட்சித் தலைவர், சுகாதாரத்துறை குழுத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மாநகராட்சிக்குப் புதிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. முதலில் மேடையில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 'பொதுமக்கள் குப்பை போடும்போது மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனப் பிரித்து கொடுக்க வேண்டும். 78 விழுக்காடு பொது மக்கள் மட்டுமே பிரித்து கொடுக்கிறார்கள். பச்சை கலரில் மட்கும் குப்பைகளையும், ஊதா கலரில் மட்காத குப்பைகளை கொடுக்க வேண்டும்' என ஆணையர் தெரிவித்தார்.