சென்னை: நாடு வளர்ந்து வரும் சூழலில் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு திறமைகளுடன் அடியெடுத்து வைக்கின்றன.
அந்த வகையில் சென்னை ஆவடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆதிஷ், ரேகா தம்பதியின் இரண்டு வயது மகள் ஆத்மிகா சாய் வசந்தா அசாத்திய ஞாபகத் திறனுடன் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பெற்றோர் குழந்தையின் திறமையை வெளிக்கொண்டு வர அடிப்படை விஷயங்களை சொல்லி கொடுத்து வருகின்றனர். இதனை எளிதாக கற்றுக்கொள்வதுடன், மனதில் பதிய வைத்துக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவராக இவர் வளர்ந்து வருகிறார்.
தேசியத் தலைவர்கள் பெயர், தேசிய கொடியை வைத்து நாடுகளின் பெயர்கள், அறிவியலாளர்கள், கோயில்கள் என அனைத்தையும் கற்றுக்கொண்டு அதனை சரியாக சொல்லி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.