தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பராமரிப்பின்றி செயல்படும் மின் மயானத்தால் சுற்றுச்சூழல் ஆபத்து! - avadi news in tamil

பராமரிப்பின்றி கிடக்கும் திருமுல்லைவாயல் மின் மயானத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சடலங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

avadi electric crematorium issue
avadi electric crematorium issue

By

Published : Apr 23, 2021, 9:05 AM IST

சென்னை:திருமுல்லைவாயல் மின் மயானத்தில்சடலங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் மின் மயானம் உள்ளது. இந்த தகனம் மேடையானது, ஆவடி நகராட்சி சார்பில் 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்களை கொண்டு வந்து எரியூட்டி செல்கின்றனர்.

இந்த தகனமேடையை அப்போதைய நகராட்சி நிர்வாகம் பராமரித்துவந்தது. அதன்பின், படிப்படியாக தகன மேடையை சரியாக பராமரிக்காமல் கைவிட்டனர். தற்போது, இதனை தனியார் நிறுவனம் பராமரிக்க மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. அவர்களும் சரிவர பராமரிக்காமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்கு சடலங்களை எரிக்கும் போது துர்நாற்றமும், புகையும் அதிகளவில் வெளியேறுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், “திருமுல்லைவாயல் மின் மயானம் சமீப காலமாக சரிவர பராமரிக்கப்படவில்லை. இதனால், சடலங்களை எரிக்கும்போது, புகை போக்கி வழியாக புகை செல்ல முடியாமல் பாதியிலே வெளியேறுகிறது. இந்த புகையானது குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.

மேலும், புகையுடன் கூடிய சாம்பல் காற்றில் பறக்கின்றன. இவை குடியிருப்புகளில் தண்ணீர் தொட்டி, வாகனங்கள் உள்ளிட்டவை மீது படிந்து வருகின்றன. மேலும், இந்த புகையால் சில நேரங்களில் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி, முதியோர் உள்ளிட்டோருக்கு மூச்சு திணறலும் ஏற்படுகின்றன.

இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், அங்கு சடலங்களை எரிக்கும் போது புகையால் குடியிருப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் போர்கால அடிப்படையில் தகன மேடையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details