தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் நான்காவது கட்டமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட சில மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது. இதனால், பேருந்து, ஆட்டோ, கால் டாக்சி போன்றவை இயங்கவில்லை.
இந்நிலையில், பல்லாவரத்தை அடுத்த பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், நாகல்கேணி போன்ற பகுதிகளில் வாகனச் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி சவாரி ஏற்றிச் சென்றதாக 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஊரடங்கு முடியும் வரை ஆட்டோக்கள் திருப்பித்தரப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கில் சவாரி - 200 ஆட்டோக்கள் பறிமுதல்! இதையும் படிங்க: தனியுரிமை தகவல்களை திருடுவதாக ஜூம் செயலி மீது வழக்கு!