ஆட்டோ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பேசிய இன்னோடா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அமெரிக்கை நாராயணன், ’வாகன இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை உயர்த்தியுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் வாயிலாக புதுப்பித்தல் கட்டணங்கள், பதிவுக் கட்டணங்கள், அபராதக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது. இந்த சட்டத்தை முற்றிலும் கைவிடக் கோரி இந்த மாதம் 24ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளோம். பலகோடி நபர்கள் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்கிவருவதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தற்போது திருத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டமானது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது.