தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு - தகாத உறவில் இருந்த தோழி உள்பட இருவர் கைது! - எரிக்கப்பட்ட தலை மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர்

பூந்தமல்லி அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில், திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்த தோழி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Auto driver
Auto driver

By

Published : Jun 5, 2022, 9:26 PM IST

சென்னை: சென்னையை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் சாலையின் ஓரம் குப்பை மேட்டில், இரண்டு கைகள் இல்லாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மாங்காடு சாதிக் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிராஜூதினை காணவில்லை என அவரது மனைவி புகார் கொடுக்க வந்தார். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை காண்பித்தபோது, இது ஆட்டோ ஓட்டுநர் சிராஜூதினின் சடலம் என்பதை அவரது மனைவி உறுதி செய்தார்.

இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிராஜூதினும், அவருடன் தகாத உறவில் இருந்த தோழி ஜூனத் என்பவரும், சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜூனத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், சிராஜூதினை தனது கள்ளக்காதலன் மகேஷ் என்பவருடன் சேர்ந்து கொலை செய்து, உடலை எரித்ததை ஒப்புக்கொண்டார். துணை நடிகை கொலை வழக்கில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும், ஜூனத்திடம் சிராஜூதின் அதிகளவு பணம் வாங்கியுள்ளார். ஜூனத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, பணத்தை கேட்டபோது சிராஜூதின் தரவில்லை. இதற்கிடையில் ஜூனத்திற்கு மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த அன்று, மகேஷ், சிராஜூதின் இருவரும் மது அருந்திவிட்டு ஜூனத் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ஜூனத்தின் மகள்களிடம் சிராஜூதின் ஆபாசமாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சிராஜூதினை சரமாரியாக தாக்கியதில், சிராஜூதின் மயங்கி கீழே விழுந்து, அங்கேயே இறந்துள்ளார். இதையடுத்து, சிராஜூதின் தலை மற்றும் கைகளை வெட்டி எடுத்துச்சென்று திருமழிசை பகுதியில் எரித்ததாகவும், உடலை எடுத்துச்சென்று கன்னப்பாளையம் செல்லும் சாலையில் எரித்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, மகேஷ், ஜூனத் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எரிக்கப்பட்ட தலை மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை காவல் நிலையம் அழைத்துச் செல்லும்போது விபத்தில் பலி

ABOUT THE AUTHOR

...view details