சென்னை:அண்ணாசாலை மேயர் கபாலமூர்த்தி சாலை சந்திப்பு வழியாக ஒருவழிப்பாதையில் நேற்றிரவு (ஆக.12) அதிவேகமாக வந்த மணல் லாரி எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ மிகுந்த சேதமடைந்து தலைகீழாக கவிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார், ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
சென்னையில் ஒருவழிப்பாதையில் வந்த லாரி ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
Etv Bharat
முதல்கட்ட தகவலில், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பரத்(46) என்பதும், ஒருவழிப்பாதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் லோகநாதன் (36) என்பதும் தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: வெட்டு காயங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தம்பதியினர்
TAGGED:
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை