தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 13, 2021, 9:55 PM IST

ETV Bharat / city

ஆட்டோ டிரைவர் தற்கொலை: அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டிலால் குத்திக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை
பாட்டிலால் குத்திக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை



சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ் தனது ஆட்டோவில், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் காவலர் சந்தோஷ், அவர்களை விசாரித்துள்ளார். இருவரிடமும் செல்போன்களை பறித்த அவர், காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளார்.

காவல்நிலையம் வர மறுத்த பாக்கியராஜ், அங்கு கிடந்த உடைந்த பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டார். படுகாயமடைந்த பாக்கியராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணைை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details