தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது - பாலியல் பலாத்காரம்

சென்னையில் பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் கைது
போக்சோவில் கைது

By

Published : Feb 3, 2022, 8:19 PM IST

சென்னை:சோழவரம், தீரன் சின்னமலை தெருவைச் சேர்ந்தவர், லட்சுமணன் (30). இவர் தனியார் நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அப்பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்து வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இதற்கிடையில், லட்சுமணன் சிறுமியிடம் அவரைக் காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

பின்னர், கடந்த ஜன.29ஆம் தேதி சிறுமியை சூலூரில் உள்ள கோயிலுக்குச் சாமி கும்பிட லட்சுமணன் அழைத்துச் சென்று உள்ளார்.

பின்னர், கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் வைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போக்சோவில் கைது

இதுகுறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று பெற்றோர் புகார் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது செய்யப்பட்டவர்

பின்னர், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் லட்சுமணனை காவல்துறை கைது செய்தனர். பின்னர், காவல்துறை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுங்கள்

தமிழ்நாடு அரசு இதுபோன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் இதுபோன்று அவசியமற்ற செயல்களினால் வரும் பாதிப்புகளைச் சந்திப்பதோடு மட்டுமில்லாமல், அதை எதிர்கொள்வதற்காக மற்றுமொரு பக்குவமற்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது தங்கள் குடும்பத்திற்கும் தங்களின் எதிர்காலத்திற்கும் நன்மைகளை தரப்போவதில்லை என்பதை மனதில் எண்ணிட வேண்டும்.

எனவே, தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் பெற்றோரின் மேற்பார்வையில் அணுகுவதே அவைகளுக்குத் தீர்வாகும்.

இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள்14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யுங்கள்.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவிக்கும் முறை எளிதாக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details