தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குறுக்கே வந்த நாய்கள்... கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ: பெண் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம் - சிசிடிவி காடி

சென்னை: நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாகத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தார்.

சிசிடிவி

By

Published : Nov 5, 2019, 11:18 AM IST

சென்னை சென்ட்ரலிலிருந்து மூலக்கொத்தலம் நோக்கி தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது புளூஸ்டார் ஹோட்டல் அருகே வரும்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் குறுக்கே ஓடியுள்ளன. அப்போது நாய்கள் மீது மோதாமலிருக்க ஆட்டோ ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

சிசிடிவி காட்சி

இதில் அஞ்சலி (46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சித்ரா (39), பரண் (13 ), பவானி (11) ஆகியோர் படுகாயங்களுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் யானைகவுனி காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை (60) கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details