தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜல்லி கற்களால் விபத்துக்குள்ளான ஆட்டோ! - Ennore accident

சென்னை: எண்ணூர் விரைவு சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களால் தடுமாறிய ஆட்டோ விபத்துக்குள்ளானது.

Auto accident

By

Published : Oct 3, 2019, 9:49 PM IST

திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச்சாவடி முதல் ஐடிசி நிறுவனம் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு 327 மின்விளக்கு கம்பங்களும், 754 எல்.இ.டி. விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

மின்கம்பம் அமைப்பதற்குத் தற்காலிக பணியாளர்கள் பள்ளம் தோண்டி வருகின்றனர். இந்தப் பள்ளத்திலிருந்து வெளியே போடப்படும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், இன்று அந்தப் பகுதியில் வந்துகொண்டிருந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ஜல்லி கற்களில் ஏறியதால் தடுமாறி விபத்துக்குள்ளானது. ஆட்டோ டிரைவரும் அதில் பயணம் செய்த பெண்மணியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

விரைவு சாலையில் விபத்து

இந்த ஜல்லி கற்களால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டவண்ணம் உள்ளதால் ஜல்லி கற்களை உரிய முறையில் அகற்றி, பின்னர் மின் கம்பம் அமைக்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அதிர்ச்சி வீடியோ !

ABOUT THE AUTHOR

...view details