தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 PM - 7 pm news summary

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்

7 மணி செய்தி சுருக்கம்
7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Aug 9, 2021, 7:37 PM IST

1.தன்பாத் நீதிபதி கொலை: சிபிஐ விசாரணையை வாரந்தோறும் கண்காணிக்க உத்தரவு!

தன்பாத் நீதிபதி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இதனை வாரந்தோறும் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய மனு!

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - 718 சாட்சிகளிடம் விசாரனை 1,126 ஆவணங்கள் பதிவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

4.டோக்கியோவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

5.தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6.அதிமுக அரசால் ரூ. 2,577 கோடி இழப்பு - நிதியமைச்சர்

அதிமுக ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7.ஜப்பானை புரட்டிப்போட்ட லுபிட் சூறாவளி

தென்மேற்கு ஜப்பானை மையமாகக் கொண்டு லுபிட் என்ற சூறாவளி தாக்கியதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8.என்.எஸ்.ஓவுடன் எந்த வர்த்தகமும் இல்லை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருளின் உரிமையாளரான என்.எஸ்.ஓ குழுமத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எந்தவித வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது

9.அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிரபலம்...!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலைக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10.விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு!

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details