சென்னை: தமிழ்நாட்டில் கலைநயம் மிக்க பல்வேறு புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கிய கோயில்களின் வரலாற்று சிறப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டது.
கோயில்களில் 3டி லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி, ஒளிக்காட்சிக்கான ஒப்பந்தப்புள்ளி
தமிழ்நாட்டின் 5 முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி அமைப்புக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதில் இந்து சமய அறநிலைய துறையுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாட்டின் ஐந்து முக்கிய கோயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தஞ்சாவூர் பெரிய கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால், பழனி கோயில், ஸ்ரீரங்கம் கோயில் கோயில்களில் முப்பரிமாண காட்சி அமைக்க ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
இதையும் படிங்க: சாலையோர டிபன் கடையில் திடீர் தீ விபத்து...வாடிக்கையாளர்கள் ஓட்டம்