தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினாவில் போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் திருமணத்திற்காக போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்ற கும்பல் அவரை அரிவாளால் தாக்கியுள்ளது.

போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு
போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு

By

Published : Jul 3, 2022, 4:23 PM IST

சென்னை: திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன் (23). திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ ஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இன்று காலை இளமாறன் போட்டோ ஷூட் எடுப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தார். இவரது நண்பர் தீபக் குமார் திருமண நாளை கொண்டாட தீபக்குமார் மனைவி சோனியா மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், விஜய், பிரபா, கார்த்தி மொத்தம் 7 பேர் மெரினா கடற்கரை நம்ம சென்னை பின்புறம் மணல் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்து மணல் பரப்பில் அமர்ந்திருந்தபோது இளமாறனிடம் எந்த ஏரியா என்றும் செல்போனை கேட்டனர். அதை தர மறுத்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி உள்ளனர். இளமாறன் கையிலிருந்த செல்போனை பறிக்க முற்பட்டபோது, தராமல் கையில் வைத்திருந்த போது, கத்தியை எடுத்து இடது கையை வெட்டி விட்டனர். இதனை கண்டு மெரினாவில் நடைபயிற்சி சென்றவர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு

இளமாறன் அங்கிருந்து உயிர் தப்பித்து கண்ணகி சிலை எதிரே உள்ள சாலை பாரதி சாலை சென்றார். அங்கிருந்தவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இளமாறன் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெட்டியவர்கள் குறித்து மெரினா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details