சென்னை:ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளுக்கிடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் யார் பங்குபெறுவது என்பது தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ஒசாமா என்ற மாணவர், பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரான ரக்கியூப் அகமதுவை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரக்கியூப், தனது நண்பர்களை அழைத்து வந்து கல்லூரி முடிந்து வெளியே வந்த ஒசாமா மற்றும் அப்துல்ரஹீம் ஆகிய இருவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஒசாமா, அப்துல் ரஹீம் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.