சென்னை: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் வடமாநில கொள்ளையர்கள் குறி வைத்து பல லட்ச ரூபாய் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் ஹரியானா, டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி ஹரியானாவில் அமீர் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமீரின் கூட்டாளியான வீரேந்தர ராவத்தையும் கைதுசெய்து சென்னை அழைத்து வந்தனர்.
இந்நிலையில், வீரேந்தர ராவத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க தரமணி காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துவந்து 18ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை: வட மாநில இளைஞருக்கு 4 நாள் போலீஸ் காவல் - SBI Bank ATM robbery
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் தனிப்படை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட வீரேந்திர ராவத்தை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை
வழக்கை விசாரித்த நீதிபதி, ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தர ராவத்துக்கு நான்கு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது.