தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி: போக்சோ சிறப்பு நீதிமன்றம்

சென்னை: தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

By

Published : Jun 11, 2021, 11:52 PM IST

சென்னை நந்தனத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற தடகள பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்திவருகிறார்.

இந்நிலையில், பயிற்சிக்கு வந்த பயிற்சி வீராங்கனை ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மே 28ஆம் தேதி கைதான நாகராஜன் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி நாகராஜன் தாக்கல்செய்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச். முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமீன் வழங்கக்கூடாது’ எனக் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details