சென்னை விமான நிலையத்தில் மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பின் வெளியே வந்த அவர்களை நிறுத்தி மத்திய வருவாய்ப் புலனாய்வு துறை (டி.ஆா்.ஐ.) மீண்டும் சோதனை செய்தது.
அப்போது 13 பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டன.
அதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் அனைவருமே கடத்தல் குருவிகள் என்றும், இவா்கள் வழக்கமாகப் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்திவருபவர்கள் என்றும் தெரியவந்தது.