தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு

கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடும் முறையை பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு
மின்வாரியம்

By

Published : Jan 28, 2022, 8:06 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் மின் சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் மின் நுகர்வோரே மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் கைப்பேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். கைப்பேசி செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது, குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.

மேலும், சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மின் கட்டண கைப்பேசி செயலியின் சாதக, பாதக விஷயங்களை, நுகர்வோர் கண்ணோட்டத்தின் வாயிலாக ஆராய்ந்து மின் துறை தலைமையகத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மீதான நிலஅபகரிப்பு புகார்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details