தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாடகர் எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல்! - பாடகர் எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

சென்னை: முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

session
session

By

Published : Feb 3, 2021, 2:16 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன், கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, சந்திரன், சிவராஜ் உள்ளிட்ட 22 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உலகப் புகழ்பெற்ற புற்று நோய் நிபுணர் மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவிற்கும், பேரவைத் தலைவர் தனபால் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். பின்னர் அனைவரும் எழுந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தியபின், சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாடகர் எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

நாளைய சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மொழியப்பெற்று விவாதம் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் பதிலளிக்கவுள்ளார். அன்றோடு பேரவை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பு செய்துள்ளதால் விவாதம் இன்றி சட்டப்பேரவை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'3 மாதங்களில் அண்ணாவின் ஆட்சி!'

ABOUT THE AUTHOR

...view details