தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடன் பத்திரம் மூலம் நிதி; அசோக் லேலண்டின் புதிய யோசனை - Ashok leyland decide to issue debt instuments to raise capital

சென்னை: கடன் பத்திரங்கள் மூலமாக 300 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு அசோக் லேலண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அஷோக் லேலாண்ட் நிறுவனம்
அஷோக் லேலாண்ட் நிறுவனம்

By

Published : May 12, 2020, 5:46 PM IST

Updated : May 12, 2020, 6:46 PM IST

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், வாகன விற்பனையும் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனால் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அடுத்த கட்ட உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதி இல்லாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில், நாட்டின் முன்னணி சரக்கு வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், கடன் பத்திரங்கள் மூலமாக 300 கோடி ரூபாய் நிதி திரட்ட தற்போது முடிவு செய்துள்ளது.

இதன்படி, வரும் 14ஆம் தேதி நடைபெறும் அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, கடன் பத்திரங்கள் வெளியிட ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஊக்க அறிவிப்பு வெளியிடுமா தமிழ்நாடு அரசு?

Last Updated : May 12, 2020, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details