பிரபல ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனமான அஷோக் லேலாண்ட் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. அந்நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் 12 நாட்கள் தங்களது தொழிற்சாலைகளில் வேலையில்லாத நாட்களை அறிவித்துள்ளது.
ஆட்டோ மொபைல் சந்தையில் தேவை குறைந்துள்ளதையடுத்து அதற்கு ஏற்ப தங்களது உற்பத்தியைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையானச் சரிவைச் சந்தித்துவருகிறது. பயணிகள் வாகன விற்பனைச் சரிவுடன் மேலும் சரக்கு, கனரக வாகன விற்பனையும் சரிந்துவருகிறது.