தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? - Arumugaswami commission

தொடர்ந்து பத்து முறை நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த முறையும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Arumugasami Commission of Inquiry
Arumugasami Commission of Inquiry

By

Published : Jul 13, 2021, 6:26 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 10 முறை நீட்டிக்கப்பட்ட ஆணையத்தின் கால அவகாசம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் சூழ்நிலையில் ஆணையத்தின் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு முழுமையான அறிக்கைப் பெறப்படுமா அல்லது இடைக்கால அறிக்கை பெறப்படுமா என்பது குறித்து அரசு ஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை அப்போலோ நிர்வாக செவிலியர், மருத்துவர்கள், ஓட்டுநர், போயஸ் தோட்டத்தில் வேலைபார்த்தவர்கள் எனப் பலரிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்த விசாரணைக்கு இதுவரை ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் யாரும் ஆஜராகாதது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு இது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க அப்போலோ உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளது. இந்நிலையில் வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்படுமா அல்லது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details