கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வரும் 29ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - Chidambaram Natarajar Temple Arudra Darshan
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது சம்பந்தமாக சப் கலெக்டர் மதுபாலன் தலைமையில் கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம் சரக காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கரோனா தொற்று காரணமாக தேர் தரிசன விழாவிற்கு வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது.
சிதம்பரத்திலுள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளில் பொதுமக்கள் யாரும் முன் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு அதன்படி ஆருத்ரா திருவிழா நடைபெறுமென கூறப்படுகிறது.