அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று மாலை 6 மணி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி, ’www.tngasa.in, www.dceonline.org’ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் இணையதள வாயிலாகச் சான்றிதழ்களை ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை பதிவேற்றலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 2 ரூபாயும், பட்டியல் பிரிவினருக்கு பதிவு கட்டணம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.