சென்னை:துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை வழக்கம் போல சுங்கத்துறையினர் கண்காணித்துப் பரிசோதித்து அனுப்பினர்.
அப்போது சென்னையை சேர்ந்த 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து 3 பேரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
சோதனையில் சிக்கினர்
அவர்களுடைய டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி, ஐக்கிய அரபு திர்ஹாம்ஸ், குவைத் தினார், பக்ரைன் தினார், ஓமன் ரியால் போன்ற வெளிநாட்டுப் பணம் கட்டுகட்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.