சென்னை: பள்ளிகள் மூன்று தினங்கள் முன் திறக்கப்பட்டன. கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மாநகராட்சி பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
அரசுப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என மாநகராட்சி வெளியிட்டுள்ள வருகை பதிவேடு மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது 9,10,11மற்றும் 12ஆம் வகுப்பு மட்டும் திறந்திருப்பதால், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் 70 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த 70 பள்ளிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 336 மாணவர்கள், 13 ஆயிரத்து9 92 மாணவிகள் என 27 ஆயிரத்து 328 பேர் பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்களும், மாநகராட்சி, கல்வித்துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக பெற்றோர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என மாநகராட்சி வெளியிட்டுள்ள வருகை பதிவேடு மூலம் தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் 73.37 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். மீதமுள்ள 26.63 விழுக்காடு மாணவர்கள் இன்னும் விடுமுறையில் உள்ளனர்.
திறக்கப்பட்டுள்ள வகுப்புகளில், பத்தாம் வகுப்பில் அதிகமானவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அதேபோல் பத்தாம் வகுப்பில் தான் அதிகமானவர்கள் விடுமுறையில் உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள் என மாநகராட்சி அலுவலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.