தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினிக்கு கோடி நன்றிகள்! - அர்ஜூனமூர்த்தி - ரஜினியின் புதிய கட்சி

சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு கோடி நன்றிகள் தெரிவிப்பதாக அவர் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

arjunamurthy
arjunamurthy

By

Published : Dec 3, 2020, 4:02 PM IST

இன்று, நாளை என கடந்த 25 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை இம்மாதம் 31 ஆம் தேதி தெரிவிப்பேன் என்றும், இன்று அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும், ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனையும் நியமிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனக்கு வாய்ப்பளித்தற்காக ரஜினிக்கு அர்ஜூனமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என பதிவிட்டுள்ளார். இவர் தமிழக பாஜகவில் அறிவுசார் அணியின் தலைவராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! ஜனவரியில் கட்சி' - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details