தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்! - மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்

பொது இடங்களில் கரோனா விதி முறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா?- மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!
கரோனா விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா?- மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!

By

Published : Feb 12, 2022, 3:45 PM IST

சென்னை: இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், " கரோனா பரவல் குறைந்ததில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் தான் காரணம். அதற்கு அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தொற்று குறைந்து வரும் நேரத்தில் பொது மக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத நிலை தற்போது உள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உயிரிழப்பு குறைவு

மேலும், ஜனவரிக்குப் பின், முன்பு இருந்த கரோனா உயிரிழப்பை விட தற்போது 10 மடங்கு இறப்பு குறைந்துள்ளது. குறிப்பாக அந்த இறப்பில் 90% பேர் இணை நோய் உள்ளவர்கள், அதிலும், 93% பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர்.

இதில் அதிகப்படியான இறப்பு, அறிகுறிகள் இருக்கும் போது அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தாமதமாக சேர்ப்பதாலும் தான் ஏற்படுகிறது.

கரோனா பாதிப்பு குறைந்து வரும் காலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் , வணிக வளாகங்களில் இறைச்சிக் கூடம் மற்றும் மீன் கூடங்களில் கரோனா விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பரிசோதனை செய்வதில் 3 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தேர்தல் காரணமாக மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா சுப்ரமணியன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details