செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அரவிந்தன். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய எஸ்பி யாக, மயிலாடுதுறை எஸ் பியாக இருந்த சுகுணா சிங் மாற்றம் செய்யப்பட்டார். அரவிந்தனுக்கு எந்தப் பணியிடமும் வழங்கப்படவில்லை, அவர் மத்திய அரசு பணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அரவிந்தன் தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவுக்கு இவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக செயல்படுவார்.