தமிழ்நாடு

tamil nadu

மாநில தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

By

Published : Feb 19, 2022, 2:58 PM IST

Updated : Feb 19, 2022, 4:26 PM IST

நோட்டா (NOTA) பொத்தானை மின்னணு வாக்கு இயந்திரத்தில் இடம்பெறச் செய்யாததற்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

arappor iyakkam jeyaram statement on nota issue
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்

சென்னை: நோட்டா (NOTA) பொத்தான் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வைக்காமல் ரகசியமாக வாக்குச் செலுத்தும் உரிமையையும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் மறுத்த,

மாநில தேர்தல் ஆணையத்தைக் கண்டிக்கும் வகையில் தேர்தல் விதி பிரிவு 71இன்படி நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவுசெய்தேன் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், ”பிரிவு 71 ஐ எப்படி பயன்படுத்துவது? அதாவது நோட்டா என்பது நம்முடைய உரிமை. ஆனால் அது மின்னணு வாக்கு இயந்திரத்தில் இல்லை. இது மாநில தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

எனவே, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரிவு 71 என்பதை பற்றி தேர்தல் அலுவலர்களுக்கே தெரியவில்லை. மேலும், தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு இதைப் பற்றி முழுமையான பயிற்சி கொடுக்கவில்லை. எனவே தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதுதான் எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 21.69 விழுக்காடு வாக்குகள் பதிவு!

Last Updated : Feb 19, 2022, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details