சென்னை: அரக்கோணம் படுகொலைக்கு காரணம் அதிமுகவை சேர்ந்தவர்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகனிடம், அரக்கோணம் கொலைகள் தொடர்பா படித்த இளைஞர்கள் திருமா பக்கம் இல்லை, திமுக கூட்டணி கட்சியினர் வன்முறையை பரப்புகிறார்கள் என அன்புமணி வீடியோ வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதிமுகதான் அரக்கோணம் கொலைகளைச் செய்தது - வேல்முருகன் - அதிமுக ஆட்சியில் சாதியக் கொலைகள்
திமுக கூட்டணி கட்சியினரா அந்த இரண்டு இளைஞர்களை கொலை செய்தார்கள். அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள்தான் இந்தக் கொலைக்கு காரணம். எனவே அதிமுகதான் இந்த கொலையை செய்திருக்கிறது.
அரக்கோணம் கொலைகளுக்கு அதிமுகதான் காரணம் - வேல்முருகன்
அதற்கு வேல்முருகன், திமுக கூட்டணி கட்சியினரா அந்த இரண்டு இளைஞர்களை கொலை செய்தார்கள். அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள்தான் இந்தக் கொலைக்கு காரணம். எனவே அதிமுகதான் இந்த கொலையை செய்திருக்கிறது. அவர்களுக்கு உதவி புரிந்தவர்கள், துணை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் வேண்டுகோள் என தெரிவித்தார்.