தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவும் அப்சரா ரெட்டி! - திருநங்கை முத்தம்மாள்

சென்னை: கரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

apsara-reddy-to-help-transgenders-who-lost-their-livelihood-due-to-corona
apsara-reddy-to-help-transgenders-who-lost-their-livelihood-due-to-corona

By

Published : Sep 1, 2020, 10:30 PM IST

சென்னை காசிமேட்டில் திருநங்கை முத்தம்மாள் என்பவருக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி, சுய தொழில் புரிவதற்கு இட்லி விற்பனை செய்யும் தள்ளுவண்டி மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்.

கரோனா நோய் தொற்றால் திருநங்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் அப்சரா ரெட்டி, சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை முத்தம்மாள் என்பவருக்கு இட்லி விற்பனை செய்து முன்னேறுவதற்காக உதவியுள்ளார். அதற்கு தேவையான இட்லி விற்பனை செய்யும் தள்ளுவண்டி, பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, குளிர்சாதன பெட்டி உள்பட 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருள்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் 100 பேருக்கு தேவையான தொழில் சம்பந்தப்பட்ட பொருள்களை வழங்க இருப்பதாகவும், பணம் கொடுத்து உதவி செய்வதைவிட வாழ்வில் முன்னேறுவதற்காக அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்க வேண்டும் எனவும் அப்சரா ரெட்டி தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

ABOUT THE AUTHOR

...view details