தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கும், திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் உள்ள காலியிடங்களையும் நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
குறைதீர் ஆணைய காலியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவு!
சென்னை: நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வுக்குழுவை விரைந்து நியமிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப நீதிபதி சுப்பையாவை தேர்வுக்குழு தலைவராக உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு நியமித்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், குழுவில் பிற உறுப்பினர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு தொடர்பா 50 பேரிடம் விசாரணை - தமிழ்நாடு அரசு