தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' பள்ளிக்கல்வித் துறையின் கீழ், வட்டார கல்வி அலுவலருக்குரிய 2018 - 19ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான தேதி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்படும். 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.