சென்னை:தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து பார்த்தசாரதி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துணைவேந்தராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்ததால் பதவி காலம் 2022 ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தை நிர்வாகம் செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் மாநில பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கு மாற்றும் வகையில் சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட தேடுதல் குழு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
இது குறித்து துணைவேந்தர் தேர்வுக்குழுவின் தலைவர் பிச்சுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான 3 நபர்களின் பெயர்களை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக் கழக வேந்தருக்கு பரிந்துரை செய்ய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.