தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த 11ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு வசந்தகுமாருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வசந்தகுமார் எம்.பி. கவலைக்கிடம்! - வசந்தகுமார்
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
mp
இந்நிலையில், வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வசந்தகுமார் விரைந்து குணமாகி வர வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி மரணம்! - ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்