சென்னை:மறைந்தமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் என 150-க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆணைய தரப்பும், சசிகலா தரப்பும் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில், அப்போலோ மருத்துவர்களிடம் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் மறுவிசாரணை செய்யக்கோரியதால், 11 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று(ஏப். 05) அப்போலோ மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகிய இரண்டு மருத்துவர்கள் இன்று ஆஜராகினர்.
அடுத்தகட்ட விசாரணை: சிகிச்சை வழங்கும்போது ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவித்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தின்படி, மருத்துவர் செந்தில் குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த மருத்துவர் செந்தில் குமார், ஜெயலலிதா சுய நினைவில்லாமலேயே மருத்துவமனையில் இருந்ததாகவும், மருத்துவர் கிலானிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு தெரியாது எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாளை(ஏப். 06) அப்போலோ மருத்துவர்கள் நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை வருகின்ற ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பினாமி பரிவர்த்தனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு'