தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முத்தையா படத்தில் மீண்டும் இணைகிறார் கார்த்தி - சினிமா செய்திகள்

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முத்தையா படத்தில் மீண்டும் இணைகிறார் கார்த்தி
முத்தையா படத்தில் மீண்டும் இணைகிறார் கார்த்தி

By

Published : Aug 12, 2021, 10:33 PM IST

தமிழ்த்திரைப்பட இயக்குநர் முத்தையா படம் என்றாலே குடும்ப உணர்வுகள் நிறைந்த படமாகும். இவரின் இயக்கத்தில் வெளியான குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கொம்பன். இப்படம் தமிழ்த்திரையுலகில் வெற்றிபெற்ற படமாகும். தற்போது நடிகர் கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முத்தையா படத்தில் மீண்டும் இணைகிறார் கார்த்தி

நடிகர் கார்த்தி உடன் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்து பிரபலமானவர், இந்த அபர்ணா பாலமுரளி.

தற்போது அவரின் தம்பி கார்த்தியுடன் அபர்ணா பாலமுரளி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்ணா பாலமுரளி மலையாளத் திரையுலக நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார்.

இவர் தமிழில் 8 தோட்டாக்கள், சர்வமும் தாளமயம், சூரரைப் போற்று படங்களில் நடித்துள்ளார். இதில் சூரரைப் போற்று படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் மிகப் பிரபலமானார்.

கார்த்தி நடிக்கும் படத்தில் அபர்ணா பாலமுரளி

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முத்தையா படத்தில் நடிப்பார் என்றும், இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!'

ABOUT THE AUTHOR

...view details