தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவுடன் அன்பழகனின் எட்டு நாள் போராட்டம் - anzbazhagan DMK twitter

சென்னை: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சுமார் 8 நாட்கள் சுவாச பிரச்னை காரணமாக தவித்துவந்தார்.

அன்பழகன்
அன்பழகன்

By

Published : Jun 10, 2020, 1:01 PM IST

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் கரோனா பாதிப்பின் காரணமாக இன்று (ஜூன் 10) மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்த அன்பழகன், கடந்த 2ஆம் தேதி கரோனா பெருந்தொற்று அறிகுறி காரணமாக பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார்.

பரிசோதனையில் அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அன்று இரவே சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 4ஆம் தேதி, அன்பழகன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும், அவருக்கு 80 விழுக்காடு ஆக்சிஜென், உயிர்காக்கும் கருவிகள் மூலம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அடுத்த நாள் ஜூன் 5 ஆம் தேதி காலை அன்பழகன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் 67 விழுக்காடு வரை ஆக்சிஜென், உயிர்காக்கும் கருவி மூலம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

மறைவுக்கு முன் அன்பழகனின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை
இதற்கிடையில் அன்பழகனின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அன்பழகன் உடல் நலம் குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ஜூன் 6 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அன்பழகனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், அவர் உடல் நலன் குறித்தும் அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை மருத்துவ குழுவினரிடம் நேரில் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் ஆய்வு செய்த திமுக தலைவர்
இதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் உடல்நிலை மீண்டும் மிகவும் மோசமடைந்ததாக ஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனை தெரிவித்தது. அன்பழகனுக்கு ஆக்சிஜென் தேவை அதிகரித்து வருவதாகவும், இருதயம் சீராக செயல்படவில்லை என்றும், சீறுநீரக செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இன்று காலை அன்பழகன் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் ம.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஸ்டாலின் நலன் விசாரித்து திரும்பிய சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலை 8.05 மணிக்கு உயிரிழந்தார் என மருத்துவமனை தெரிவித்தது.
அன்பழகன் மறைவு குறித்த அறிக்கை
அன்பழகன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். கட்சி கூட்டங்கள் தொடங்கி ஆர்ப்பாட்டம், போராட்டம் வரை சென்னையில் திராவிட முன்னேற்ற கழக செயல்பாடுகளில் அன்பழகனின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜூன் 10ஆம் தேதியான இன்று அன்பழகனின் பிறந்தநாள். பிறந்தநாள் அன்றே அன்பழகன் மரணமடைந்துள்ளது திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்பழகன் மரணத்தை தொடர்ந்து திமுக சார்பாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்கள் ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும், திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details