சென்னை:முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் தான், வேல்ஸ் கல்லூரி குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசரி கணேஷுக்குச்சொந்தமான வேல்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு தரச்சான்றிதழ் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக ஐசரி கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில், புதிய கல்லூரி முறைகேடு வழக்கில் இரண்டாவது நபராக ஐசரி கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் மேலும் 4 மருத்துவப் பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.