இந்த கல்வி ஆண்டிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத்தின் அமைப்பாளர் கார்த்திக், " குழந்தைகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வியில் மாணவர் சேர்க்கை 100 விழுக்காடாக உள்ளது.
இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறானளி மாணவர்கள் கல்வி கற்கும் நிலை இருந்துவந்தது. தற்போது ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யாரிடமும் கருத்துகளை கேட்காமல் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
குழந்தைத்தொழிலாளர்களை உருவாக்கும் 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தும், மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டால் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறமுடியாமலும் தொடர்ந்து கல்வி கற்க முடியாத சூழ்நிலையும் உருவாகும். இதன்மூலம் அதிகப்படியான குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் நிலை ஏற்படும்.
இந்த பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர்கள். எனவே தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை திருமபப் பெற வேண்டும்." என்றார்.
இதையும் படிங்க:அமைச்சர்கள் முதலில் பொதுத்தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும் -சீமான் ஆவேசம்