சென்னையை அடுத்த ஆலந்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிறுவர்கள் முழக்கம் - ஆர்ப்பரிப்பில் போராட்டக்காரர்கள் - குடியுரிமை திருத்தச் சட்டம்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிரித்து ஆலந்தூரில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து சிறுவர்கள் முழக்கம் எழுப்பினர்.
protest
இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது சிறுவர்கள் அனைவரும் மேடையில் ஏறி அச்சட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமெழுப்பினர். இந்நிகழ்வைக் கண்ட போராட்டக்காரர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'