தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வில் 1997ல் பிறந்தவர்கள் தேர்ச்சியா? - குருப் 2 தேர்வு

சென்னை: குரூப் 4, குரூப் 2ஏ, தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 முதல் நிலைத் தேர்வு குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

malpractice
malpractice

By

Published : Feb 6, 2020, 3:11 PM IST

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் சார் பதிவாளர், ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவியாளர், நகராட்சி ஆணையர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு ஆய்வாளர் என 23 பொறுப்புகளுக்கு குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.

2018 ஆம் ஆண்டில் 1,334 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2019 நவம்பர் 23 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே முதல்நிலை உள்ளிட்ட 3 கட்டத் தேர்வுகளில் மாணவர்கள் 500க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பது, முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

97 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் பிறந்தோர் 2018 ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, பட்டப்படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். 97 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் பிறந்து பொறியியல் பயிலும் மாணவர்கள், 2018ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை வைத்திருக்க சாத்தியமில்லை. கலை அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அந்த வாய்ப்புள்ளது.

மேலும், 2018ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் பங்கேற்ற அனைவரும் கலை, அறிவியல் மாணவர்களா என்றும், குரூப் 2 நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது மிகக் கடினம் எனும் நிலையில், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் 20 வயது நிரம்பியவர்களால் அது எப்படி சாத்தியமாயிற்று என்றும் கேள்வி எழுந்துள்ளது. எனவே, இதிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், இதுகுறித்தும் விசாராணை நடத்தப்பட வேண்டுமென்றும் தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சி ஊழியர்களுக்கான ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய தொழிலாளர் நலத்துறை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details