சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 34 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதில் முக்கிய சில...
முக்கிய அறிவிப்புகள்
1. மீன்களை கையாளுவதற்கு பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், மீன் அங்காடிகள் அமைத்தல், குளிர் காப்பு வாகனம், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிட 393 பயனாளிகளுக்கு 24 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
2. 169 ஒருங்கிணைந்த நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வண்ண மீன் வளர்ப்பு மையங்கள் அமைத்திட 6 கோடியே 47 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
3. மீனவர் கூட்டுறவு சங்கங்களை, மீனவர் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
4. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் தளம், படகு பழுதுபார்க்கும் தளம் போன்ற கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
5. சென்னை மாவட்டம், நெட்டுகுப்பம் மற்றும் தாழங்குப்பம் ஆகிய கிராமங்களில் 15 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
6. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும்.
7. திருநெல்வேலியில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கும் பணி 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.