இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இசை, தையல், ஓவியம், உடற்கல்வி ஆகியவற்றில் 1,598 புதிய பணியிடங்களையும், ஏற்கனவே உள்ள பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 31 ஆம் தேதி முதல், ஏப்ரல் 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கு 2021 ஜூலை 31 ஆம் தேதி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி ஆகிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.